
கதவை திறந்தேன்
காற்று வரவில்லை
கவிதையாய்
நீ வந்தாய்...
இராமர் பாலம்
இருக்கிறதா...
எனக்கு தெரியாது,
பார்வையிலே ஆயிரம்
பாலங்கள் கட்டி விட்டாய்
அருகில் இருந்து
அலைபேசியில்
இலவச மின்னஞ்சல்
அனுப்பினாய்
தொலைந்து போன
இதயத்தை
மின்னஞ்சலிலாவது
அனுப்பி வை
இப்போது
கதவை திறந்தால்
கவிதை வரவில்லை
கண்ணீர் வருகிறது.
கவிதை நல்லாஇருக்குங்க...
ReplyDeleteஅற்புதம்
ReplyDeleteவேறென்ன சொல்ல...?
தொலைந்து போன
ReplyDeleteஇதயத்தை
மின்னஞ்சலிலாவது
அனுப்பி வை//
நல்லா கேட்டீங்க!!
//
ReplyDeleteஅருகில் இருந்து
அலைபேசியில்
இலவச மின்னஞ்சல்
அனுப்பினாய்
தொலைந்து போன
இதயத்தை
மின்னஞ்சலிலாவது
அனுப்பி வை
//
அதான் தொலைந்து போச்சே..
அப்புறம் எப்படி அனுப்புறது..? :))
உங்களின் வோட்டுவடிவிலான தொடரும் ஆதரவிற்கு நன்றி..
ReplyDeleteகடை பக்கமும் வந்துட்டு போங்க..
தயவு செய்து இந்த வோர்ட் வெரிபிகேசன தூக்குங்க சாமியோவ்..
ReplyDeleteபின்னூட்டுவதற்கு இது ரொம்ப இடைஞ்சலா இருக்கு..
தலைப்பை பார்த்து பயந்துட்டன்.. but
ReplyDeleteமிக அருமை நண்பரே